முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்

முக்கொம்பு கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை முன்பு அமைக்கப்பட்டிருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது.
முக்கொம்பு மணல் தடுப்பு உடைப்பு - டெல்டா விவசாயிகள் அச்சம்
x
கடந்த ஆண்டு முக்கொம்பு , கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த , பழமையான அணை இடிந்து விழுந்தது. இதன் காரணமாக மணல் மூட்டைகள், பாறாங்கற்களை கொண்டு தற்காலிக தடுப்பணை அமைக்கப்பட்டது.இந்நிலையில் , தற்காலிக தடுப்பணை முன் அமைக்கப்பட்டு இருந்த மணல் அணை உடைப்பு ஏற்பட்டது, இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், தற்போது வந்து கொண்டிருக்கும் சுமார் 9 ஆயிரம் கன அடி தண்ணீரால், மணல் தடுப்பு உடைந்துள்ளது என்றும், தற்காலிக தடுப்பணை வலுவாக உருவாக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.       

Next Story

மேலும் செய்திகள்