"ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம்" - அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவிற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தோம் - அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி
x
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்.ஜி.ஆருக்கு நல்ல சிகிச்சை அளித்து அப்பலோ மருத்துவமனை காப்பாற்றியதாக குறிப்பிட்டார். உலக தரம் வாய்ந்த சிறந்த மருத்துவர்கள் அப்பலோ மருத்துவமனையில் இருப்பதாகவும், ஆறுமுகசாமி ஆணையம் தங்களை விசாரணைக்கு அழைத்தபோது ஆணையத்தில் மருத்துவர் குழு இல்லாததை  ஏற்கமுடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கினால் , ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்