நேற்றிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை : விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்றிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை : விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
x
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓங்கூர், கூச்சி கொளத்தூர், ஒலக்கூர், சாரம், மயிலம் பகுதி சென்டூர், முப்புளி, கூட்டேரிப்பட்டு, தீவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில், மழை நீர் நிரம்பும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

காற்றுடன் கூடிய கனமழை-விவசாயிகள் மகிழ்ச்சிதிருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி, கும்மிடிப்பூண்டி,  ஊத்துக்கோட்டை, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இரண்டாவது நாளாக தொடரும் கன மழை காரணமாக சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி  மாவட்டம் முழுவதும் பலத்த மழை...கிருஷ்ணகிரியில் மாவட்டம் முழுவதும், பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முழுவதும் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிகோட்டை சூளகிரி, வேப்பனபள்ளி, காவேரிபட்டினம், ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் நிலவி வந்த கடும் வெப்பம் தனிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கிராமங்கள் இருளில் மூழ்கியதோடு, சாலைகளும் தண்ணீரால் சூழ்ந்தது. 
Next Story

மேலும் செய்திகள்