சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். சிறந்த மாநகராட்சிக்கான விருது சேலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு தருமபுரிக்கும், 2-ம் பரிசு வேதாரண்யம் நகராட்சிக்கும், 3-ஆம் பரிசு அறந்தாங்கி நகராட்சிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு மதுரை டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கும், 2-ம் பரிசு நன்னிலம் பேரூராட்சிக்கும், 3 ஆம் பரிசு பவானிசாகர் பேரூராட்சிக்கும் வழங்கப்பட்டது.
Next Story