கோட்டையில் கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி

வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோட்டையில் கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி
x
சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. போக்குவரத்து துறையின் காவல் வீரர்கள் புடை சூழ முதலமைச்சர் கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்தார். அவரை தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று, ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்ற முதலமைச்சர், முப்படை மற்றும் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்