"நெல்லை, கோவை, நீலகிரி மாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம்

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இந்த தகவலை வெளியிட்டார். கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். காற்றானது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்