நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு : 3 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அருகே நான்கு வழிச்சாலை அமைப்பது குறித்து 3 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு : 3 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு
x
கங்கை கொண்ட சோழபுரத்தை சேர்ந்த மோகன் என்பவர், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் வழக்கறிஞர், நான்கு வழிச்சாலை அமைந்தால் புராதன சின்னமாக பிரகதீஸ்வரர் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என வாதத்தை முன்வைத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சாலை அமைக்க தடை செய்யும் வகையில் எந்த சட்டவிதிகளும் இல்லை எனத் தெரிவித்தனர். குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தங்கள் மனுவை பரிசீலிக்காமல், சாலை அமைக்கும் பணிகள் தொடர்வதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை மனுவை மூன்று வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்