"இனி தி.மு.க.வினர் காஷ்மீரில் சொத்துகளை வாங்குவார்கள்" - அமைச்சர் ஜெயகுமார்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து, இனி தி.மு.க. வினர் அங்கு சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
x
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து, இனி தி.மு.க. வினர் அங்கு சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 370 ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற பெரும்பான்மையான மக்களின் எண்ணத்தையே மத்திய  அரசு நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.  மத்திய அரசின் நடவடிக்கையால் இனி தி.மு.க. வினர் காஷ்மீரிலும் சொத்துகளை வாங்கி குவிப்பார்கள் என விமர்சனம் செய்துள்ளார். ஆனால், வெளி வேடத்திற்காகத் தான் திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுவதாக ஜெயகுமார் குறிப்பிட்டார். முதுகு எலும்பு இல்லை என டி.ஆர். பாலு பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயகுமார், யாருக்கு முதுகு எலும்பு இல்லை என்று வரலாறுக்கு தெரியும் என்றார்.  

Next Story

மேலும் செய்திகள்