பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : நீர்மட்டம் 2 நாட்களில் 4 அடி உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : நீர்மட்டம் 2 நாட்களில் 4 அடி உயர்வு
x
பவானிசாகர் அணையின்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், 2 வது பெரிய நீர்த்தேக்கமான பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.  இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் வடகேரளாவின் ஒருசில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்