பூட்டிய வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை : ரூ. 2 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை

சீர்காழி அருகே பூட்டிய வீட்டில் 70 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் தடயத்தை கண்டுபிடிக்க முடியாதபடி, துணி சோப்பு பவுடரை தூவி விட்டு சென்றுள்ளனர்.
பூட்டிய வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை : ரூ. 2 லட்சம் திருட்டு - போலீஸ் விசாரணை
x
சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் சுனாமி நகரை சேர்ந்தவர் இளையராஜா. குடும்பத்தினருடன் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்த அவர், வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 சவரன் நகைகள், 2 லட்சம் ரொக்கம் திருடி போயிருப்பது தெரியவந்தது. போலீசார் தடயத்தை கண்டுபிடிக்க முடியாதபடி துணி சோப்பு பவுடரை வீடு முழுவதும் கொள்ளையர்கள் தூவி சென்றுள்ளனர். இதுதொடர்பாக சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Next Story

மேலும் செய்திகள்