தனியார் ஹோமியோ மருத்துவ கல்லூரி ஓரின சேர்க்கை புகார்

தனியார் ஹோமியோ மருத்துவ கல்லூரியில் ஓரின சேர்க்கை புகார் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தனியார் ஹோமியோ மருத்துவ கல்லூரி ஓரின சேர்க்கை புகார்
x
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக் கோட்டையை சேர்ந்த ஜியாவுதீன் எனபவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கினை தொடர்ந்திருந்தார், அதில், கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் ஹோமியோ  மருத்துவ கல்லூரியில், மாணவர்கள், மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கட்டாயப்படுத்தி கொடுத்து, தம்மை வலுக்கட்டாயமாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து மிரட்டி பல முறை ஓரின சேர்க்கைக்கு அடிபணிய வைத்த‌தாக கூறியிருந்தார். இது தொடர்பாக ,  கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தபோது, அனைத்து ஆவணங்களும், கட்டிய கட்டணமும் திருப்பி தரப்படும் என கல்லூரி நிர்வாகம் ஒப்பு கொண்டதாக மனுவில் கூறியுள்ள அவர், இதுவரை கல்லூரி நிர்வாகம் எவ்வித ஆவணங்களோ, கல்வி கட்டணத்தையோ ஒப்படைக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.  மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்