சமஸ்கிருதத்திற்கு ரூ.400 கோடி, தமிழுக்கு வெறும் ரூ.4 கோடி - தி.மு.க. எம்.பி. கனிமொழி

சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.
x
சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டையில்  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமஸ்கிருத மொழிக்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, தமிழ் மொழிக்காக வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறினார். இதே நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன், செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிதி பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்