கரகாட்டம் கற்று கொள்ள குவைத்தில் இருந்து தமிழகம் வரும் சிறுமி

கரகாட்ட கலையின் மேல் ஆர்வம் கொண்ட 6 வயது சிறுமி, குவைத்தில் இருந்து தமிழகம் வந்து கரகாட்டம் கற்று கொள்கிறார்.
x
திருவாரூரை சேர்ந்த பழனிச்சாமி குவைத்தில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது 6 வயது மகள் தனஸ்ரீ அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கரகாட்ட கலையை முறைப்படி மகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என எண்ணிய பெற்றோர், தஞ்சை சேர்ந்த கரகாட்ட கலைஞர் தேன்மொழி ராஜேந்திரனிடம் பயிற்சிக்காக சேர்த்தனர். பள்ளி விடுமுறை நாட்களில் குவைத்தில் இருந்து தஞ்சை வந்து தனஸ்ரீ கரகாட்டம் கற்றுகொள்கிறார். பலகைமேல் ஆடுதல், தட்டு மேல் ஆடுதல், என முறையான பயிற்சி அவருக்கு அளிக்கப்படுகிறது. மேலும் பள்ளி ஆண்டு விழாவில் கரகாட்டம் ஆடிய தன ஸ்ரீக்கு பள்ளி மற்றும் சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்தன. தமிழர்களின் பாரம்பரிய கலையான கரகாட்டத்தை கற்க இளம் தலைமுறையினர் முன்வந்து அந்த கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என தன ஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்