ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மாலுமி... வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த ஆதித்ய வாசுதேவன் என்ற மாலுமி உள்பட 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
x
ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த ஆதித்ய வாசுதேவன் என்ற மாலுமி உள்பட 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த மாதம் 19ஆம் தேதி இம்பெரோ என்ற கப்பலில், ஆதித்யா உள்பட 18 இந்தியர்கள் சென்ற போது ஈரான் அருகேயுள்ள ஹார்மோஸ் நீரிணை பகுதியில், அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆதித்ய வாசுதேவன் உள்பட சிறைப்பிடிக்கப்பட்ட 18 இந்தியர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்