தேன்கனிகோட்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் : நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம்

ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்கும் பணியில், சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தேன்கனிகோட்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் : நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம்
x
ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்கும் பணியில், சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தேன்கனிகோட்டையை சேர்ந்த பெருமாள் என்பவரின் 4 வயது மகன் ஜெனசுந்தர், கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிபட்டு வந்துள்ளான். தர்மபுரி அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர்,  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்