மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை

சிவகாசி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி நடந்த கூட்டுப் பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை
x
சிவகாசி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி நடந்த கூட்டுப் பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விநாயகர் பூஜையுடன் தொடங்கிய கூட்டுப் பிரார்த்தனை ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ஓம் சக்தி ஓம் என்ற கோஷத்துடன் கோயிலை 18 முறை வலம் வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் அமர்ந்து மனம் உருக அம்மனை வணங்கி வழிபட்டனர். அதனை தொடர்ந்து மழைக்கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது, இதனை பக்தர்கள் வரிசையாக நின்று ஆர்வத்தோடு வாங்கி சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்