சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் உயிரிழப்பு : படுகாயமடைந்த மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை

கன்னியாகுமரி மாவட்டம் நரிகுளம் 4 வழிச்சாலையில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார், மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் உயிரிழப்பு : படுகாயமடைந்த மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை
x
கன்னியாகுமரி மாவட்டம் நரிகுளம் 4 வழிச்சாலையில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார், மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார். ஸ்ரீலட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவன், வினிஸ்ராஜ் ஆகியோர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள். நேற்றிரவு கன்னியாகுமரியில் இருந்து 4 வழிச்சாலை வழியாக அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். நரிகுளம் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் சாலையோர இரும்பு தடுப்புவேலி மீது மோதி, தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், படுகாயம் அடைந்த வினிஸ்ராஜுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்