டயல் பார் வாட்டர் 2.0 திட்டம் அறிமுகம்... சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு

சென்னையில் தண்ணீர் முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை திங்கட்கிழமை முதல் மாநகராட்சி தொடங்குகிறது.
x
சென்னை குடிநீர் வாரியம் நாள்தோறும் சுமார் 11 ஆயிரத்தில் இருந்து 12, ஆயிரம்  நடைகள் வரை டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இதில் 2,ஆயிரத்து 300 முதல் 2 ஆயிரத்து 500 நடைகள் ''டையல் பார் வாட்டர்'' என்ற  முறையில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் டேங்கர் லாரி தண்ணீர் வினியோகம் சரியாக நடைபெறுவதில்லை  என்றும், முன் பதிவு செய்தாலும் தண்ணீர் பெற ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை காத்திருக்கும் சூழ்நிலை இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் தண்ணீர் வினியோகம் செய்யும் நடைமுறை திங்கள் கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டம் டயல் பார் வாட்டர் 2.0 என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 ஆயிரம் லிட்டர், 12 ஆயிரம் லிட்டர் மற்றும் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அடுக்குமாடி அல்லாத குடியிருப்புகளுக்கு - 3 ஆயிரம் லிட்டர், 6 ஆயிரம் லிட்டர் மற்றும் 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு லாரிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் 400 ரூபாயும், 6 ஆயிரம்  லிட்டர் 475 ரூபாய், 9 ஆயிரம் லிட்டர் 700 ,ரூபாய், 16 ஆயிரம்  லிட்டர் தண்ணீர் ஆயிரத்து 200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இதன்படி குடியிருப்புவாசிகள் தேவைக்கேற்ப முன்பதிவு செய்து தண்ணீர் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் லிட்டர் தண்ணீரை தொலைபேசி மற்றும் இணையதளம் வாயிலாகவும், மற்றவைகளை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள வங்கி,  கடன் அட்டை இவற்றில் ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்து தண்ணீருக்கான கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை முன்பதிவு செய்து விட்டால் அதனை ரத்து செய்யும் வசதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு முறை முன்பதிவு செய்து விட்டால் அடுத்த 7 முதல் 10 நாட்களுக்கு பிறகே அடுத்த பதிவு செய்ய முடியும். மேலும் ஏற்கனவே பழைய முறையில் பதிவு செய்தவர்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்படும என்றும் இத்திட்டம் குறித்த தகவல்களை chennaimetrowater.tn.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்