கைதிகளுக்கு அடிப்படை கல்வி அறிவு புகட்ட பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்

எழுதப் படிக்கத் தெரியாத சிறைவாசிகளுக்கு அடிப்படைக் கல்வி அறிவைப் புகட்டுவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கைதிகளுக்கு அடிப்படை கல்வி அறிவு புகட்ட பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்
x
தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைச் சாலைகளில் எழுதப்படிக்கத் தெரியாத சிறைவாசிகள் எண்ணிக்கை குறித்து முறைசாரா கல்வி இயக்குனரகம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் எழுதப் படிக்க தெரியாத சிறைவாசிகள் என்பது தெரிய வந்துள்ளது.  இதையடுத்து ஆயிரம் பேருக்கும் அடிப்படை கல்வி அறிவைப் புகட்டுவதற்கு முறை சாரா கல்வி இயக்குனரகம் மூலம் திட்டமிடப்பட்டது. இந்த சிறைவாசிகளுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும், கூட்டல், கழித்தல் போன்ற அடிப்படை கணக்கு போன்றவற்றை கற்பிக்கவும்  உரிய பயிற்சிகள் விரைவில் அளிக்கப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்