"சீனப் பொருட்களால் இந்திய ஜவுளி துறை பாதிப்பு" - மாநிலங்களவையில் வைகோ

பஞ்சு விலை அடிக்கடி உயர்வதன் காரணமாக, நூற்பாலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.
சீனப் பொருட்களால் இந்திய ஜவுளி துறை பாதிப்பு - மாநிலங்களவையில் வைகோ
x
பஞ்சு விலை அடிக்கடி உயர்வதன் காரணமாக, நூற்பாலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார். மாநிலங்களவையில் பேசிய அவர்,  ஜவுளித்துறை தொழிலில் நிலையற்ற தன்மை நிலவும் நிலையில்,  சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, இந்திய ஜவுளித்துறை பாதிப்படையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்