கோவை வீரபாண்டியில் பரிதவிக்கும் யானை

வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் அவதியுற்ற யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
x
வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் அவதியுற்ற யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். கோவை மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி அருகே வால்குட்டை மலையடிவாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் பெண் யானை ஒன்று அவதிப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் அந்த யானை நிற்பதால், இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைக்கு தண்ணீர், உணவு கொடுத்து  சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, யானை நின்று கொண்டு இருப்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்