புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு எதிர்ப்பு - மாணவர்களை அடித்து வெளியேற்றிய ஆசிரியர்கள்

புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த முயன்ற கல்லூரி மாணவர்களை ஆசிரியர்களே அடித்து வெளியேற்றினர்.
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு எதிர்ப்பு - மாணவர்களை அடித்து வெளியேற்றிய ஆசிரியர்கள்
x
புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த முயன்ற கல்லூரி மாணவர்களை ஆசிரியர்களே அடித்து வெளியேற்றினர். புதிய கல்விக் கொள்கைத் திட்ட வரைவுக்கு, தமிழ்நாட்டில் பெரும்பாலான கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் , சென்னை, மாநில கல்லூரி வளாகத்தில் வரைவு நகலை எரிக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்ததால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கையில் துண்டு பிரசுரங்களுடன் வந்த மாணவர்கள் இருவரை தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள், அவர்களை அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கல்லுரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்