பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க
மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம். போக்சோ சட்டத்தின் கீழ் 100 வழக்குகளுக்கு மேல் இருக்கிறதோ, அந்த மாவட்டங்களில் 60 நாட்களுக்குள் இந்த சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. பாலியல் வன்முறைகள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் நிதி உதவியுடன் இந்த சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்