ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி...

மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக ஒரு மாத கால பரோலில் நளினி இன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று வேலூர் பெண்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ள நளினி, வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள சிங்கராயர் என்பவரின் வீட்டில் தங்குகிறார். இதையடுத்து அவரை, போலீசார் பலத்து பாதுகாப்புடன் சத்துவாச்சாரிக்கு அழைத்து சென்றனர்.

 பரோலில் வெளியே வந்தார் நளினி - வழக்கறிஞர் புகழேந்தி கருத்து..  Next Story

மேலும் செய்திகள்