குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
x
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 41 அடியாகவும், நீர் வரத்து 799 அடியாகவும், நீர் வெளியேற்றம் 508 கன அடியாகவும் உள்ளது. இதனிடையே, குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு ஆயிரம் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. வரத்தை பொறுத்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்