உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் கால அவகாசமா? - ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும், மீண்டும் கால அவகாசம் கோரும் தமிழக முதலமைச்சர் மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் கால அவகாசமா? - ஸ்டாலின் கண்டனம்
x
உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும், மீண்டும் கால அவகாசம் கோரும் தமிழக முதலமைச்சர் மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், உள்ளாட்சி தேர்தலுக்கு  கால அவகாசம் கோருவதை கண்டிப்பதாக தெரிவித்தார். அக்டோபர் 2016ல் நடத்தி முடித்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தலை இன்னும் நட‌த்தாமல் அவகாசம் கோருவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கேலி செய்வதற்கு ச‌ம‌ம் என்று கூறியுள்ளார். மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும், உள்நோக்கத்துடன் ஒவ்வொரு காரணங்களாக கண்டுபிடித்து உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் கால அவகாசம் கோரி வருவதாகவும், எப்போது தேர்தல் நடத்தினாலும், அதிமுகவிற்கு தோல்வி உறுதி என்பதால், 33 மாதங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின்,தமிழகத்தில் அரசியல் சட்டம் செயல்படாமல் இருப்பதற்கு இதுவே சான்று என்றும் கூறியுள்ளார். ஆகவே, மீண்டும் மீண்டும் கால அவகாசம் கோரி வரும் மாநில தேர்தல் ஆணையரிடமும், முதலமைச்சரிடமும் தமிழக ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என ஸ்டாலின் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்