ரூ.1.5 கோடி சொத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீதிக்கு அனுப்பிய மகன்...

புதுச்சேரியில் ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிய மகன், பெற்றோரை வீதிக்கு அனுப்பிய பெரும் சோகம் அரங்கேறியுள்ளது.
x
புதுச்சேரி வழுதாவூர் சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளியான சங்கரதாஸ், தாம் சிறுக சிறுக சேமித்த பணத்தில், கனவு வீடு ஒன்று கட்டியுள்ளார். மகள் திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு சென்ற நிலையில், மகனுக்கும் காதல் திருமணம் செய்து வைத்துவிட்டு அவர்களுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், பெற்ற மகனே சொந்த வீட்டில் இருந்து விரட்டியதால், மனைவியுடன்  சங்கரதாஸ் வீதிவீதியாக அலைந்துள்ளார். ஐ.டி.ஐ. படித்த மகன் ராஜ்மோகன், தொழில் தொடங்க லோன் வாங்க வேண்டும், அதற்கு, வீட்டை தமது பெயரில் மாற்றித் தர வேண்டும் என்று தந்தை சங்கரதாஸிடம் கேட்டுள்ளார். இதில், உருகிய சங்கரதாஸ், யாருக்கும் தெரியாமல், மகன் பெயருக்கு சொத்தை மாற்றிக் கொடுத்துள்ளார். சிறிது காலத்தில், மகன் வீட்டை விட்டு துரத்திவிட்டார். அடுத்து நடந்ததெல்லாம் யாருக்கும் நேரக்கூடாத சோகம்...

மகள் வீட்டுக்கு சென்ற தாய், தந்தை, போதிய வருமானம் இல்லாத வீட்டில் சுமையாக இருக்க விரும்பாமல் வெளியேறியுள்ளனர்.  உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியின் துன்பம் சகியாத சங்கரதாஸ், வழக்கறிஞர் ஒருவரை அணுகி, மகன் சொத்து எழுதி வாங்கியது பற்றி கூறியுள்ளார். வழக்கறிஞர் உதவியுடன் தமது சொத்தை மீட்டுத் தரக்கோரி முதியோர் பராமரிப்பு தீர்வு நடுவர் தீர்ப்பாயத்தில் சங்கரதாஸ் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, ராஜ்மோகனை அழைத்த தீர்ப்பாய நடுவர், பெற்றோரை பாதுகாக்குமாறு கூறியுள்ளார். இதை, ராஜ்மோகன் ஏற்க மறுத்த நிலையில், அவரது பெயரில் இருந்த 1614 சதுர அடி பரப்பிலான வீட்டு பத்திரத்தை ரத்து செய்த தீர்ப்பாயம், சொத்தை சங்கரதாசுக்கு திருப்பித் தர உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை, சங்கரதாஸிடம் அளித்த சப்-கலெக்டர் சுதாகர், சார் பதிவாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் உத்தரவு நகலை அனுப்பி வைத்தார். போற்றி வளர்த்த பெற்றோரிடம், சொத்தை பறித்துக் கொண்டு வீதிக்கு அனுப்பிய மகனுக்கு, தீர்ப்பாயம் புகட்டிய பாடம் யாவரும் உணர வேண்டியது.


Next Story

மேலும் செய்திகள்