கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - கண்டுபிடித்து தர கோரிக்கை

கடலில் தவறி விழுந்த மீனவரை கண்டுபிடித்து தர கோரி உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - கண்டுபிடித்து தர கோரிக்கை
x
கடலில் தவறி விழுந்த மீனவரை கண்டுபிடித்து தர கோரி உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கடந்த மாதம் 29ஆம் தேதி  காசிமேடு துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் 10 மீனவர்கள் பழவேற்காடு கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆனந்தன் என்ற மீனவர் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் அவரை தேட முடியாமல் கரை திரும்பினர். இதனையடுத்து கரை சேர்ந்த 9 மீனவர்களும் மாயமான மீனவரை கண்டுபிடித்து தர கோரி காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 


Next Story

மேலும் செய்திகள்