கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால தடயங்கள் கண்டுபிடிப்பு

கொள்ளிடம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தடயங்கள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால தடயங்கள் கண்டுபிடிப்பு
x
கொள்ளிடம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தடயங்கள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தஞ்சை மாவட்டம் பெரும்புலியூர் கல்வெட்டினைக் கொண்டு திருமானீஸ்வரர் கோயில் பற்றி, தொல்லியல் துறை ஓய்வுப்பெற்ற  எழுத்தர் ராசேந்திரன், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன், கல்வெட்டு ஆர்வலர் தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, கொள்ளிடம் ஆற்றின் வடகரையில்  செம்பாறை தளம் போன்று இருக்குமிடத்தில் சில கருங்கற்கள் குவியல்கள் காணப்படுகின்றன என்றும்,  அவற்றில் சில கோயில் கட்டுமான கற்களாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.  கருங்கல் சூலக்கல் ஒன்றும் அதில் காணப்படுவதாகவும், திருமானீஸ்வரர் கோயில் இருந்து அழிந்துள்ளதையே இந்த தடயங்களால் அறிய முடிவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கருப்பு, சிவப்பு நிறங்களைக் கொண்ட பானையோடுகளும் காணப்படும் நிலையில், இந்த பகுதி, சோழர் காலத்தில் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்கலாம் என்பதை அறிய முடிவதாகவும், இதுதொடர்பாக தொல்லியல்துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் மூவரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்