டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய மனு - தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய மனு - தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
x
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மார்ச் மாதம் நடத்திய
குரூப் 1  முதல் நிலை தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில்,  தேர்வில் கேட்கப்பட்ட 18 கேள்விகளுக்கு, மாதிரி விடைத்தாளில் தேர்வாணையம் அளித்திருந்த விடை தவறானவை என புகார் எழுந்தது. 

இதனையடுத்து,  அந்த தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று,  சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்டோர் டி.என்.பி.எஸ்.சி-க்கு கோரிக்கை மனு அளித்தனர்.  ஆனால் அதனை ஏற்காத டி.என்.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.  

இதனை எதிர்த்து விக்னேஷ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தவறான விடைகள் குறித்து 3 பேர் கொண்ட குழு மூலம் விசாரணை நடத்தி தேர்வெழுதியவர்களுக்கு கூடுதலாக தலா 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பளித்த நீதிபதி டி.என்.பி.எஸ்.சி. விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, குரூப் 1 தேர்வை  எதிர்த்த விக்னேஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்