"ரூ.5000 கோடியில் சென்னையில் இரண்டு மின் உற்பத்தி நிலையம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ரூ.5000 கோடியில் சென்னையில் இரண்டு மின் உற்பத்தி நிலையம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசுப்பள்ளிகளில்163 கோடி ரூபாய் செலவில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார். அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என்றும், புதிய பாடத் திட்டங்கள் தொடர்பாக 611 கோடியே 63 லட்ச ரூபாய் செலவில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றார். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதில், ஷூக்கள் வழங்கப்படும் என்றும், 2020-21ஆம் கல்வியாண்டியில் 10 கோடி ரூபாய்  செலவில் இவை வழங்கப்படும் என்றார். 10 கோடி ரூபாய் செலவில் சென்னை சைதாப்பேட்டையில் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் கட்டப்படும் என கூறிய முதலமைச்சர், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்