புது பஸ்ஸை இழப்பீடாக கோரும் நடத்துனர்கள் - அரசு போக்குவரத்து கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுகால பலன்களை வழங்காததால் இழப்பீடாக புதிய பேருந்த வழங்க கோரிய மனுவில் 8 வாரத்திற்குள் பதிலளிக்க விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட, வேலூர் மண்டலத்தில் நடத்துநர்களாக பணியாற்றிய பக்தவச்சலம், கடந்த பிப்ரவரி மாதமும், ராதாகிருஷ்ணன் கடந்த மே மாதமும் பணி ஓய்வு பெற்றுள்ளனர். பக்தவச்சலத்திற்கு பணி கொடை உள்ளிட்ட ஓய்வு கால பலன்களாக 9 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயும், ராதாகிருஷ்ணனுக்கு 18 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட வேண்டும். பணி கொடை சட்டத்தின் படி ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும். இந்நிலையில், குறித்த காலத்தில் தங்களுக்கு ஓய்வுகால பலன்கள் வழங்கப்படாததால், 18 சதவீத வட்டியுடன் அந்த தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும் அல்லது அதற்கு பதிலாக புதிய பேருந்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரி இருவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், வழக்கு குறித்து 8 வார காலத்திற்குள் பதிலளிக்க விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்