50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் 50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
x
மதுரையில் 50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு போக்குவரத்து கழகத்திற்கு தேவையான நிதியுதவியை தமிழக அரசு அளித்து வருவதாக கூறினார். மாணவ-மாணவிகள் பயண சலுகை கட்டணம் மற்றும் டீசல் மானியமாக ஆயிரத்து 297 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்தியாவிலேயே சிறந்ததாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விளங்குவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்