தண்ணீர் பிரச்சினை : பேரவையில் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
x
தண்ணீர் பிரச்சினை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர், பருவமழை கைவிட்டதால், அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காட்சி அளிப்பதாக கூறினார். தண்ணீர் பற்றாக்குறையால் தமிழக மக்கள் தத்தளித்து வருவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது வரவேற்கத்தக்க செயல் என பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக தண்ணீர் பிரச்சினை தொடர்பாக புதுச்சேரி ஆளுநரின் கட்டுரையை மேற்கோள்காட்டி, அரசு நிர்வாகத்தை குறை கூறும்வகையில் இருந்த வாசகங்களை அவர் படித்து காண்பித்தார். அப்போது குறுக்கிட்ட சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ஆளுநர் கிரண்பேடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். காரசார விவாதத்திற்கு பிறகு, ஸ்டாலின் மற்றும் சட்ட அமைச்சரின் பேச்சு, அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்