கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் ஆணவ கொலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை அருகே அதிர வைத்த ஆணவக் கொலை : சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் உயிரிழப்பு
x
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காதலர்கள் கனகராஜ், வர்ஷினி பிரியா வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை திருமணம் செய்து வைப்பதாக கூறி இருவீட்டாரும் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த, கனகராஜின் அண்ணன் வினோத் அவர்களை சில நாட்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டியதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயமடைந்த வர்ஷினி பிரியா கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு வர்ஷினி பிரியா உயிரிழந்தார். இதனிடையே போலீசில் சரணடைந்த வினோத், தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் இன்று விசாரணை மேற்கொள்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்