பின்னலாடை நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை : வசீகர விளம்பரங்களுடன் வரவேற்கும் வேலை வாய்ப்பு

விரும்பிய நேரத்தில் வரலாம், தங்க நாணயம் இலவசம், வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவீர் என பின்னலாடை நிறுவனம் வேலைக்கு அழைப்பு விடுத்துள்ள வினோதம், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பின்னலாடை நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை : வசீகர விளம்பரங்களுடன் வரவேற்கும் வேலை வாய்ப்பு
x
திருப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது பனியன் கம்பெனிகள்தான். பின்னலாடை உற்பத்தி மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் திருப்பூருக்கு, குட்டி சிங்கப்பூர் என்ற பெயரும் உண்டு. அங்கு சென்ற யாரும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில், எடுத்த ஆர்டர்களை குறித்த காலத்தில் முடித்துக் கொடுப்பதில், பலருக்கும் போட்டி உண்டு. ஆனால், ஆள் பற்றாக்குறை ஏற்பட்ட நிறுவனம் ஒன்று, வேலைக்கு ஆள் எடுக்கும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாட்ஸ் ஆப் மூலம் திருப்பூரின் கவனத்தை திசை திருப்பி இருக்கும் அந்த விளம்பரத்தில், தங்கள் விரும்பிய நேரத்தில் வேலைக்கு வர அனுமதி உண்டு, ஆண்டு முழுவதும் பணியாற்றினால் அரை சவரன் தங்க நாணயம் என அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என்றும் , குடும்ப பெண்களுக்கு சலுகை என ஏகப்பட்ட சலுகைகள் அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பு மூலம் ஆள் தேவை அதிகரித்துள்ளதும், சம்பள உயர்வு கோரிக்கை கிடப்பில் போடப்பட்ட நிலையில், அதிக சலுகை தரும் விளம்பரமும் பின்னலாடை தொழிலாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்