மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

நெம்மேலியில், ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில், கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
x
சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, நெம்மேலியில் ஆயிரத்து 700 கோடி மதிப்பில், கடல் நீரைக் குடிநீராக்கும் 3-வது நிலையம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டது.  இதற்கான பணி ஆணை, கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானது. திட்ட மதிப்பீடு தயாரித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி பெற்றது. திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு, ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 3-வது புதிய நிலைய பணிகளை 30 மாதங்களுக்குள் நிறைவு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட இருக்கும் 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம், மத்திய மற்றும் தென் சென்னை பகுதியில் உள்ள 9 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்