7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

சேலம், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
x
இதற்கான அறிவிப்பை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டார். இதன்படி, சென்னை ஆட்சியராக சீதா லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் ஆட்சியராக சண்முக சுந்தரமும், சேலம் மாவட்ட ஆட்சியராக ராமனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகிணி, அரசு இசைக் கல்லூரி பதிவாளராக, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்