கூடங்குளம் அணு உலை சென்சார்கள் குறித்த விவகாரம் : அணு மின் நிலைய பொது விழிப்புணர்வுக் குழு விளக்கம்

கூடங்குளத்தில், அணு உலைகளின் அழுத்தத்தைக் கண்டறியும் சென்சார்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை என்கிற தகவலில் உண்மை இல்லை என, அணு மின் நிலைய பொது விழிப்புணர்வு குழுத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலை சென்சார்கள் குறித்த விவகாரம் : அணு மின் நிலைய பொது விழிப்புணர்வுக் குழு விளக்கம்
x
கூடங்குளத்தில், அணு உலைகளின் அழுத்தத்தைக் கண்டறியும் சென்சார்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை என்கிற தகவலில் உண்மை இல்லை என, அணு மின் நிலைய பொது விழிப்புணர்வு குழுத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'கூடங்குளத்தில் அணு உலைகள் இயங்கி வரும் வேளையில், அழுத்தம் குறித்து கண்டறியக் கூடிய சென்சார்கள் இயங்குவது தேவையற்ற ஒன்று' என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளின் போது அணுக்களின் அழுத்தம், அதன் விசை ஆகியவை முழுவதுமாக கண்காணிக்கப்படும் சென்சார்கள் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டு, முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில், அழுத்தத்தை கண்காணிக்கும் சென்சார்கள் இரண்டு ஆண்டுகளாக இயங்கவில்லை என தகவல் பரவி வருவது  தவறானது என்றும், உண்மைக்கு புறம்பானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்