ஆணா...? பெண்ணா...? - குழந்தையின் பாலினத்தை மாற்றி கூறியதால் பரபரப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் பாலினத்தை மாற்றி கூறிய சம்பவம் குழப்பதை ஏற்படுத்தியது.
x
சேலம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன்,  கூலித்தொழிலாளி. நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவி கோமதி, பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செவ்வாய் கிழமை இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் சில நிமிடங்களிலேயே அது பெண் குழந்தை என மாற்றிக் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் குழப்பமடைந்தனர். இதுதொடர்பாக குழந்தையின் தந்தை வெங்கடேசன், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் மாற்றி, மாற்றி கூறியதால், குழந்தையை மாற்றியிருக்க கூட வாய்ப்பு உள்ளது என சந்தேகம் எழுப்புகிறார், வெங்கடேசன்... குழந்தை தங்களுடையது தான் என்பதை சோதனை நடத்தி உறுதி செய்ய வேண்டும் என்பதில் வெங்கடேசன், கோமதி தம்பதி உறுதியாக இருக்கிறார்கள்.. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்