சென்னைவாசிகளுக்கு ஆறுதல் அளித்த கனமழை : ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது

வறட்சியால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.
சென்னைவாசிகளுக்கு ஆறுதல் அளித்த கனமழை : ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது
x
வறட்சியால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. மாலை 6 மணி அளவில் கோடம்பாக்கம்,தி நகர், வடபழனி, சாலிகிராமம், நுங்கம்பாக்கம், பெரம்பூர் சேப்பாக்கம், மெரினா, மத்திய கைலாஷ், அடையார், திருவான்மியூர், கிண்டி என பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதை போல் திருவள்ளூர், திருவாரூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தாகம் தீர்க்க தண்ணீரின்றி குடிநீருக்கே மக்கள் அல்லாடிக்கொண்டிருந்த வேளையில், பெய்திருக்கும் மழை மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது.. 

Next Story

மேலும் செய்திகள்