படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு அரசு உதவி

பெற்றோரை இழந்து, கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த பழங்குடியின மாணவி முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீண்டும் அதே கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.
x
ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பகுதியில் உள்ள காளிதிம்பம் கிராமத்தை சேர்ந்த மாணவி, சிவரஞ்சனியின் தாய் மாரம்மாள், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிவரஞ்சனி, கடந்த ஆண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்த நிலையில், தந்தை சாமிநாதனும், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 

இதனால், சிவரஞ்சனியும், சகோதரர் ஹரி பிரசாந்த்தும் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர். சிவரஞ்சனி 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து தமது சகோதரனின் படிப்புக்கு உதவி வந்தார். இதுகுறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து, இவர்களது படிப்பு செலவை அரசே ஏற்கும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த அக்டோபரில் அறிவித்தார். இதற்கிடையே, ஹரிபிரசாந்த் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில்,  தற்போது சிவரஞ்சனி கோவை அரசுக்கல்லூரியில் சேர்ந்து பயின்று வருவதோடு, அங்குள்ள விடுதியிலும் தங்குவதற்கு பழங்குடியினர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்