பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம் : மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச புகைப்படம்
பதிவு : ஜூன் 26, 2019, 10:15 AM
பள்ளி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து காதலிக்குமாறு 5 இளைஞர்கள் மிரட்டிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ வெளியான சம்பவம் இன்னும் பலர் மனதில் நீங்காமல் உள்ளது. அந்த வடு ஆறுவதற்குள் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் அதே பொள்ளாச்சியில் அரங்கேறி யிருக்கிறது. பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முகமது சபீர். இவர் தமது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி, காதலித்து செல்ஃபோன்களில் ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது...

ஆபாச புகைப்படங்களை வாட்ஸ் ஆப்பில் STATUS ஆகவும், முகநூலிலும் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த மாணவியின் உறவினர் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். இது குறித்து சபிரிடம் கேட்க சென்றதற்கு, மாணவியின் உறவினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முகமது சபீர் மற்றும் அவரது நண்பர்கள் முகமது ரியாசுதீன், வசந்தகுமார், முகமது யூசுப் , கமர்தீன், ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். செல்போன்களில் மாணவிகளுடன் ஆபாசமாக எடுத்த மேலும் பல புகைப்படங்கள்  இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சபீரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 4 பேரும் பொள்ளாச்சி மற்றும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

பொள்ளாச்சி சம்பவம் நிகழ்ந்து பல எதிர்ப்புகள் கிளம்பியும் அதே பகுதியில் பெண்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1534 views

பிற செய்திகள்

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

15 views

நியூட்ரினோ திட்டம்-சட்டசபையில் தெளிவுப்படுத்த வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

9 views

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதல்வராக முடியாது - அர்ஜுன் சம்பத்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

30 views

உணவு பொருள் அட்டைகளில் கலோரி, சர்க்கரை அளவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

நோய் தடுப்பு சுகாதார கல்வி குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று பேரவையில் பூங்கோதை ஆலடி அருணா வலியுறுத்தியுள்ளார்.

18 views

சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப்படம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படத்தை வரும் 19 ஆம் தேதி முதலமைச்சர் திறந்துவைக்க உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

27 views

பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை - ஆ.ராசா

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படை தன்மையே இருக்காது என்று திமுக உறுப்பினர் ஆ.ராசா மக்களவையில் தெரிவித்தார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.