மாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.
மாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி
x
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது. அதில் அதிமுக கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒரு இடம் உறுதி செய்யப்பட்டு ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்களை கைப்பற்ற அதிமுகவின் பல்வேறு மூத்த உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஒரு இடம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்கு தொ.மு.ச. சண்முகம், என்.ஆர்.இளங்கோ, முன்னாள் அமைச்சர் சாமிநாதன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஈரோடு முத்துசாமி, திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த வில்சன் ஆகியோர் இடையே போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்