குடிநீர் தட்டுப்பாடு : "போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை" - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 சதவீத குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வறட்சி காரணமாக, புதுக்கோட்டை சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, 'குடிநீர் தட்டுப்பாடின்றி  கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' எனக் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்