சாலையில் கிடந்த பணம் - காவல் ஆணையரிடம் ஒப்படைத்த முதியவர்

கோவை அருகே சாலையில் கிடந்த கை பர்சை முதிவயர் ஒருவர் காவல் ஆணையரிடம் வழங்கினார்.
x
கோவை அருகே சாலையில் கிடந்த கை பர்சை முதிவயர் ஒருவர் காவல் ஆணையரிடம் வழங்கினார். சின்னவேடம்பட்டியை சேர்ந்த எண்ணெய் வியாபாரி லக்‌ஷ்மனன். 80 வயதான இவர், சைக்கிளில் சென்று எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார்.  வழக்கம்போல  தொழிலுக்கு சென்றுக்கொண்டிருந்த போது பூ மார்க்கெட் சாலையில் கிடந்த கை பர்சை பார்த்துள்ளார். அதனை திறந்தபோது, அதில், அடையாள அட்டைகளும், 6 ஆயிரத்து 120 ரூபாய் பணம் இருக்கவே, அந்த பர்ஸை கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒப்படைத்தார். அடையாள அட்டையை வைத்து உரியவரிடம் பர்சை ஒப்படைத்த போலீசார், லக்ஷ்மனை பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்