சேலம்: உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது..!

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் சொல்லுகிறது இந்த தொகுப்பு.
x
கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவிக்காலம் 5 முறை நீட்டிக்கப்பட்டது.கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் சேலம் மாநகர மக்ககள் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். தங்களுடைய புகாரை எந்த அதிகாரியை சந்தித்து தெரிவிக்க வேண்டும் என்றும் தெரியாமல் சிரமப்படுகின்றனர்.

சேலம் மாநகரில் குப்பைகள் அள்ளப்படாமல், மலை போல் தேங்கியுள்ளதாகவும், இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக, கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீர் பிரச்சனை குறித்து யாரிடம் அணுகுவது என்று தெரியாமல் சேலம் வாசிகள் தவித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தி, மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க விரைந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்