நிதி அயோக் கூட்டம் : "புதிய மொந்தையில் பழைய கள்" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
நிதி அயோக் கூட்டம் : புதிய மொந்தையில் பழைய கள் - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கொடுத்த மனுவில் இடம் பெற்றுள்ள 29 கோரிக்கைகளும் புதிய மொந்தையில் பழைய கள் அடைக்கப்பட்டுள்ளதை நினைவூட்டுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய 17 ஆயிரத்து 350 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வு, மேகதாது அணை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வாய்ப்புக் கிடைத்தும் கோட்டை விட்டு, தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திரும்பி உள்ளதாகவும், அவரை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்