இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு
x
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்வதற்காக, அக்கட்சி 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. திமுக சட்ட ஆலோசகர் இளங்கோ தலைமையிலான இந்த குழுவினர், திமுக தோல்வியடைந்த தொகுதிகளான சாத்தூர், நிலக்கோட்டை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், மானாமதுரை, விளாத்திகுளம், பரமக்குடி, சூளுர் ஆகிய தொகுதிகளில் ஆய்வு செய்வார்கள் என்றும், அதற்கான தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்