விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர் பிரச்னை, சமாளிக்க முடியாமல் திணறும் பள்ளிகள்..!

பள்ளிகளில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்தி, தீர்வு காண வேண்டும் என, அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். நடைமுறையில் இது சாத்தியமா என்பதை விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு
x
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், பள்ளிகளிலும் தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சூழலில், ‛‛அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்தி, தண்ணீர் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம்'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக அமைப்புகள் உயிர்ப்புடன் இருக்கிறதா, நிதி இருக்கிறதா என அறியாமல், அமைச்சர் கருத்து தெரிவித்திருப்பது தவறான வழிகாட்டுதல் என கூறுகிறார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி மோசஸ்.

உள்ளாட்சி அமைப்புகளில், ‛எஜூகேஷன் செஸ்' எனப்படும் கல்விக்காக வசூலிக்கப்படும் வரி பல கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன எனவும், இந்த நிதியை பயன்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

தண்ணீர் பிரச்னை என்பது மேன்மேலும் அதிகரித்தால், பள்ளிகள் இயங்குவதே கேள்விக்குறியாகி,  மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பள்ளிக் கல்வித்துறையே, சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து, போர்க்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!


Next Story

மேலும் செய்திகள்